சாலை பணிகள் தாமதம் - பொதுமக்கள் அவதி

X
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே வடக்கு இளையாத்தங்குடி விலக்கு பகுதியில் இருந்து கிராமத்திற்குள் செல்லும் சாலை குண்டும் குழியுமாக மாறியதால் இங்கு பாரத பிரதமர் கிராமப்புற தார் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 2 கிலோ மீட்டர் வரை தார் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தார்ச்சாலை போடுவதற்காக ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டன. இதனால் ஓரிரு மாதங்களுக்குள் பணி நிறைவடையும் என காத்திருந்த பொதுமக்களுக்கு, ஏழு மதங்களாகியும் பணி முடிவடையாமல் தாமதமானதால், அந்த சாலையில் பயணிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டு கிரசர்மண் பரப்பியபடி அப்படியே விட்டு சென்றதால், காற்றில் தூசி பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழும் சூழல் ஏற்படுகிறது. அதே போன்று ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்பவர்கள், முதியவர்கள் என பலரும் மிகுந்த சிரமத்தோடு சாலையில் பயணிக்கின்றனர். அதோடு சாலையின் இரு புறங்களிலும் வாய்க்கால் இருப்பதால் ஜல்லியில் வாகனங்களை இயக்க பயந்து கொண்டு வாய்க்காலின் ஓரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் தவறி வாய்க்காலில் விழக்கூடிய சூழ்நிலையும் உள்ளது.
Next Story

