தேவகோட்டை அருகே தேசிய பறவையை வேட்டையாடிய இருவர் கைது

X
சிவகங்கை அருகே உள்ள கோமாளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் மற்றும் அழகர்சாமி ஆகியோர், தேவகோட்டை தாலுகா முப்பையூர் அருகே இரவு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சுமார் 9 மயில்கள் வேட்டையாடப்பட்டுள்ளன. மாவட்ட வன அதிகாரி பிரபா உத்தரவின் கீழ் வனத்துறை அதிகாரிகளால் இறந்த மயில்களை மீட்டுள்ளனர். இதனை தொடர்ந்து காரைக்குடி வனத்துறையினர் இருவரையும் கைது செய்து, திருப்பத்தூர் சப்-செயலில் அடைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய பறவையை வேட்டைடிய செய்தி அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

