கனிமவள கொள்ளைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

கனிமவள கொள்ளைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.
X
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கனிம வளக் கொள்ளைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கொண்டையம்பட்டி கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சிறு கனிம சுரங்க விதிகளுக்குப் புறம்பாகவும், அனுமதியே இல்லாமலும் பாறைகளை வெட்டியெடுக்கும் பணிகள் நடைபெறுவதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வாடிபட்டியில் கண்டன முழக்க போராட்டம் இன்று (மே.30) நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கனிம கொள்ளைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
Next Story