தமிழக ஆளுநர் மதுரை வருகை

X
மதுரை அருகே விரகனூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று மதியம் 1 மணியளவில் திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை வரும் தமிழக ஆளுநர் ரவி அவர்கள் தங்கி மதிய உணவுக்கு பிறகு சாலை மார்க்கமாக2.30 மணிக்கு புறப்பட்டு ராமேஸ்வரம் செல்கிறார். ராமேஸ்வரத்தில் இன்று இரவு தங்கி விட்டு நாளை (மே.31)காலை சாமி தரிசனம் முடித்து மதியம் மீண்டும் விரகனூர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். ஓய்வு எடுத்து பின்பு மாலை 4 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகிறார். அம்மனை தரிசித்த பின் ஆளுநர் இரவு மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். ஆளுநர் வருகையை முன்னிட்டு மதுரை மாநகர காவல் துறையினர் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story

