ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாதந்தோறும் கடைசி வாரத்தில் விவசாயிகள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன்,வேளாண் துறை,வருவாய்த்துறை உள்ளிட்ட துறை வாரியான அதிகாரிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அதற்கான விளக்கங்களை கேட்டு விவசாயிகளுக்கு பதில் அளித்தனர்.
Next Story