கேத்தம்பட்டி அருகே டூவீலர் மீது லாரி மோதி விபத்து. இளைஞர் படுகாயம்.
கேத்தம்பட்டி அருகே டூவீலர் மீது லாரி மோதி விபத்து. இளைஞர் படுகாயம். கரூரை அடுத்த வெங்கமேடு, கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர்முருகேசன் மகன் சஞ்சய் வயது 20. இவர் மே 28ஆம் தேதி காலை 11:15 மணி அளவில் , கொடையூரில் இருந்து ஆட்டையாம்பரப்பு கிராம சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் கேத்தம்பட்டி அருகே வந்த போது , எதிர் திசையில் சேலம்மாவட்டம் , மேட்டூர் அருகே நரியாம்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி வயது 24 என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரி , சஞ்சய் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சஞ்சயை மீட்டு மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சஞ்சையின் உறவினர் முகமது ரியாசுதீன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் லாரியை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.
Next Story




