அரவக்குறிச்சி வருவாய் தீர்வாயம் குடிகள் மாநாட்டில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அரவக்குறிச்சி வருவாய் தீர்வாயம் குடிகள் மாநாட்டில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரவக்குறிச்சி வருவாய் தீர்வாயம் குடிகள் மாநாட்டில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் குடிகள் மாநாடு இறுதி நாளில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மகேந்திரன், குறுவட்ட அளவிலான கிராம நிர்வாக அலுவலர்கள் , வருவாய் ஆய்வாளர்கள் , கிராம மக்கள் , பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசில் , மற்றும் வட்டாட்சியர் மகேந்திரன் நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். நலத்திட்டங்களை பெற்றுக் கொண்ட பயனாளிகள் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
Next Story