ஆர். ஐ. ஆர். எஸ் சிகிச்சை குறித்து மருத்துவர்கள் பேட்டி

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர்கள் ஆர். ஐ. ஆர். எஸ் சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தனர்.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், ரெட்ரோகிரேட் இண்ட்ரா-ரினல் சர்ஜரி (RPS) எனப்படும் சிகிச்சை மூலம் வயதுப் பெண் நோயாளி ஒருவருக்கு சிறுநீரகத்தில் இருந்த இரண்டு பெரிய கற்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன. அவர். இரத்தக் கட்டி ஏற்படுவதைத் தடுப்பதற்கான இரு வெவ்வேறு வகையான மருந்துகளை உட்கொண்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நோயாளிக்கு இதயநோயக்கான சிகிச்சையில் ஒரு மாதத்துக்கு முன்பு ஸ்டென்ட் பொருத்தப்பட்டிருந்தது அவரது வலது சிறுநீரகத்தில் 35 25 செ.மீ அளவுள்ள கல்லும், இடது சிறுநீரகத்தில் 215 செ.மீ கல்லும் இருந்தன. தற்போது அவையிரண்டுமே அகற்றப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு நோயாளி நலத்துடன் இருக்கிறார். இது குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின யூராலஜி, ஆண்கள் நோயியல் பிரிவின் முதுநிலை மருத்துவ நிபுணர் மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் டி பாவ் வின்செனட் தலைமையில் இந்த சமீபத்திய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அவர் இதுகுறித்துப் பேசுகையில், 'ஆர்ஐ.ஆர்.எஸ் சிகிச்சையில் பல படிநிலைகள் உண்டு. அதன்படி, நோயாளியின சிறுநீரகத்தை நோக்கி யூரிட்டராசகோப் எனும் நுண்ணிய நெகிழ்தன்மையுடைய கருவி செலுத்தப்படும். இது சிறிய கேமரா, சிறு விளக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய மெலிதான சாதனம். இது, சிறுநீர்ப்பாதை, சிறுநீர்ப்பை வழியாக சிறுநீரகத்துக்கு செலுத்தப்படுகிறது. மேலும் அவர் பேசும்போது, 'ஆர்.ஐ.ஆர் எஸ் முறையின் சிறப்பு என்னவென்றால் இதில் உடலைகீறி சிகிச்சை செய்யப்படுவதில்லை என்பதுதான் மேலும் இரத்த கசிவு சிறிய தொந்தரவுகளுக்கான வாய்ப்பு இதில மிகவும் குறைவு இச்சிகிச்சை பெற்றவர் சிகிச்சை முடித்த மறுநாளே பணிக்கு சென்றுவிடலாம். எனவே, இது வாதியான அதே நேரத்தில் உடலில் மிகக்குறைவான ஊடுவவைச் செய்யக்கூடிய சிகிச்சை முறையாக இருக்கிறது என்றார் இந்நிகழ்வில் சிறுநீரகவியல் துறையின் தலைவரும் முதுநிலை மருத்துவர் ஆர்.ரவிச்சந்திரன், அத்துறையின் முதுநிலை மருத்துவர் வேணுகோபால் கொனாகி மயக்கவியல் மற்றும் வலிநீக்கியல் துறையின் முதுநிலை மருத்துவர் D.கண்ணன் மற்றும் மார்க்கெட்டிங் துறையின் பொது மேலாளர் சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story