உடல்தானம் செய்ய ஆவணங்களை கலெக்டரிடம் சமர்ப்பித்த தாய் மற்றும் மகன்

உடல்தானம் செய்ய ஆவணங்களை கலெக்டரிடம் சமர்ப்பித்த தாய் மற்றும் மகன்
X
குமாரபாளையம் பகுதியில் ஆய்வுக்கு வந்த கலெக்டர் வசம், உடல்தானம் செய்யும் ஆவணங்களை தாயும், மகனும் கொடுத்தனர்.
குமாரபாளையம் பகுதியில் ஆய்வுக்கு வந்த கலெக்டர் வசம், உடல்தானம் செய்யும் ஆவணங்களை தாயும், மகனும் கொடுத்தனர். உங்களை தேடி உங்கள் ஊரில், என்ற திட்டத்தின்படி, குமாரபாளையம் பகுதியில், மாவட்ட கலெக்டர் உமா, ஆய்வு செய்தார்கள். அப்போது, நாமக்கல் மருத்துவ கல்லூரி மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்சிக்காக உடல்தானம் செய்திட விருப்பம் தெரிவித்து, ஈரோடு, தனலட்சுமி மற்றும் இவரின் மூத்த மகன் பார்த்தசாரதி ஆகியோர், சமூக ஆர்வலர் சித்ரா உடன் வந்து, அதற்கான ஒப்புதல் ஆவணங்களை, கலெக்டர் உமா வசம் கொடுத்தனர். உடல்தானம் செய்ய முன்வந்த தாய் மற்றும் மகன் இருவரையும், கலெக்டர் உமா பாராட்டினார்.
Next Story