கொட்டக்குடி ஆற்றில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடரும் வெள்ளப்பெருக்கு

X
தேனி மாவட்டம் போடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான கொட்டகுடி குரங்கணி வடக்கு மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு மேலாக பெய்து வருவதால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக அணைப்பிளையார் அணைக்கட்டு நீர்வீழ்ச்சி வழியாக வைகை அணைக்கு வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது. போடி அருகே உள்ள இந்த அணை பிள்ளையார் அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் ராஜவாய்க்கால் வழியாக போடி சுற்றுப்பகுதியில் உள்ள ஏழு குளங்களுக்கு அதிக நீர் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் உபரி நீரானது அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் வெள்ளநீராக ஆர்ப்பரித்துக் கொண்டு வைகை அணைக்கு செல்கிறது. தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் கொட்டகுடி ஆற்றில் குளிக்கவோ கால்நடைகளை குளிப்பாட்டவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என பொதுப்பணி துறையினர் மற்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

