கரூரில் களைகட்டும் கள்ள லாட்டரி வியாபாரம். மூவர் கைது.
கரூரில் களைகட்டும் கள்ள லாட்டரி வியாபாரம். மூவர் கைது. தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்து பல ஆண்டுகள் ஆகின்றன. ஆயுனும் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி விற்பனை கரூரில் களைகட்டி வருகிறது. லாட்டரி வியாபாரத்தில் ஈடுபட்ட சிறு வியாபாரிகளை அவ்வப்போது காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள தனியார் ஜவுளிக்கடை அருகே கள்ள லாட்டரி வியாபாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் , தோப்புப்பட்டி பகுதியைச் சேர்ந்த நடராஜன் வயது 70 , கரூர் வடக்கு காந்திகிராமம் ஜேஜே கார்டன் பகுதியைச் சேர்ந்த குகன் ராஜ் வயது 33 , தாந்தோணி மலை வெள்ள கவுண்டனூரைச் சேர்ந்த மோகன்ராஜ் வயது 66 ஆகிய மூன்று பேரையும் கைது செய்து , அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த கள்ள லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மூவர் மீதும் கரூர் மற்றும் தாந்தோணி மலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பின்னர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் காவல்துறையினர்.
Next Story




