மகளிர் போலீஸ் நிலையத்தில் விழுந்த மரம்

X
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால் பல இடங் களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்தநிலையில் குளச்சல் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் குளச்சல் போலீஸ் நிலைய வளாகத்தில் நின்ற பழமையான வேப்பமரம் இரண்டாக பிளந்து முறிந்து மகளிர் போலீஸ் நிலைய கட்டிடத் தின் மீது விழுந்தது. இதில் போலீஸ் நிலைய கட்டிடத்தின் மேல் மாடியின் சுவர் மற்றும் முன்பக்க தாழ் வாரம் பகுதிகள் உடைந்து சேதமடைந்தது, இதுகுறித்து தகவலறிந்த குளச்சல், திங்கள்சந்தை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் போராடி மரங்களை வெட்டி அகற்றினர். மரங்கள் முறிந்து விழுந்ததில் குளச்சல் பகுதியில் பல மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. இதனை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்தனர் ..
Next Story

