குன்னூர் அருகே உள்ள காட்டேரி பூங்காவில் முதல் முறையாக இன்று மலை பயிர்கள் கண்காட்சி துவங்கியது.........

குன்னூர் அருகே உள்ள காட்டேரி பூங்காவில் முதல் முறையாக இன்று மலை பயிர்கள் கண்காட்சி துவங்கியது.........
X
அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பூங்காவில் முதல் முறையாக இன்று மலை பயிர்கள் கண்காட்சி துவங்கியது......... நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா கடந்த 3-ம் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து ஊட்டியில் ரோஜா கண்காட்சி மற்றும் மலர் கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, தொடர்ந்து குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி ஆகியவை நடந்தது. இதில் இறுதி நிகழ்ச்சியாக குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள காட்டேரி பூங்காவில் முதன்முறையாக மலைத் பயிர்கள் கண்காட்சி இன்று துவங்கி ஜூன் 1-ம் தேதி வரை (3நாட்கள்) நடக்கிறது.இதனை முன்னிட்டு ஏற்கனவே நடவு செய்யப்பட்டுள்ள இரண்டு லட்சம் மலர் செடிகள் பூத்துக் குலுங்கி வரும் நிலையில். ஆயிரக்கணக்கான தொட்டிகளில் பல்வேறு வகையிலான கண்களை கவரும் வகையில் மலர்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் தேயிலை, மலை கிராம குடிசை,காபி,ரப்பர், தென்னை,வெற்றிலை பனங்காய் ,பாவக்காய்மற்றும் மலைப்பகுதியில் உள்ள மருத்துவ குணம் கொண்ட மூலிகை பயிர்கள், வனப்பகுதியில் இருக்கும் அரிய வகை பயிர்கள் உள்ளிட்டவற்றை வடிவமைத்து சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிப்பதுடன், மலைத் தோட்ட பயிர்களின் மகத்துவத்தை கூறும் வகையில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் முழுவதும் அனைத்து பூங்காக்களும் ரெட் அலர்ட் காரணமாக மூடப்பட்டுள்ள நிலையில் இன்று துவங்கியுள்ள மலை பயிர்கள் கண்காட்சிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்லைத் துறை இணை இயக்குனர் சிபிலா மேரி மற்றும் தோட்டக்கலைத் துறையினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியில் மாணவியர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது .
Next Story