உதகை -கூடலூர் நெடுஞ்சாலையில் நடுவட்டம் மலைப்பாதையில் பாறைகள் சரியும் அபாயம் - தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு ..............

உதகை -கூடலூர் நெடுஞ்சாலையில் நடுவட்டம் மலைப்பாதையில்  பாறைகள் சரியும் அபாயம் -  தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு ..............
X
வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றன
உதகை -கூடலூர் நெடுஞ்சாலையில் நடுவட்டம் மலைப்பாதையில் பாறைகள் சரியும் அபாயம் - தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு .............. நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை பகுதியில் உள்ள மலையிலிருந்து ராட்சத பாறை விழும் அபாயம் உள்ளதால் மாவட்ட நிா்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் 2 நாள்களுக்கு ரெட் அலா்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொடா்ந்து கனமழை பெய்வருகிறது. கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை காட்சிமுனை அருகே உயரமான பகுதியிலிருந்து ராட்சத பாறை உருண்டு மரத்தில் மோதி நிற்கிறது. அந்த பாறை எந்த நேரத்திலும் உருண்டு கீழே விழும் அபாயம் உள்ளது. பாறை உருண்டு வரும் நேரத்தில் சாலையில் வாகனங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், மாவட்ட நிா்வாகம் அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. பொக்லைன் இயந்திரம் உள்ளிட்ட மீட்புக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளோடு ஊழியா்கள் தயாா் நிலையில் உள்ளனா். கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்ட மலை பாதையில் அவ்வப்போது பாறைகள் சரிந்து வரும் நிலையில் அப்பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு செய்தனர் . தவளமலை பகுதியில் மீட்பு பணிக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ள பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள். முன்னெச்சரிக்கையாக போக்குவரத்து கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்களை கொண்டு செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் தவிர மற்ற வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் அந்த வழியாக செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. கா்நாடகம் மற்றும் கேரளத்திலிருந்து உதகைக்குச் செல்லும் சுற்றுலா காா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. காா்கள் உள்ளிட்ட சிறிய வாகனங்கள் கல்லட்டி வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது. அதிக கனமழை எச்சரிக்கையால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story