ஓசூரில் கண்டக்டர் இல்லாமல் பேருந்தை இயக்கிய டிரைவர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை- ஒசூர் இடையே இயக்கப்பட்டு வரும் 1ம் எண் நகர பஸ் நேற்று ஓசூரில்லிருந்து தேன்கனிக்கோட்டைக்கு சென்ற நிலையில் பஸ் கண்டக்டர் இல்லாததை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்து டிரைவரிடம் தெரிவித்தனர். இந்த நிலையில் கண்டக்டர் சக்திவேல் இல்லாமல் பஸ்ஸை இயக்கிய டிரைவர் பிரபு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story

