வாணியம்பாடியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பல் மருத்துவர் மற்றும் பல் மருத்து சங்கத்தினர் பேட்டி..

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழக பொதுசுகாதார துறை வெளியிட்ட அறிக்கை முற்றிலும் தவறு, மூடப்பட்ட மருத்துவமனையில் இருந்து ஆய்வு எடுத்துள்ளனர் வாணியம்பாடியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பல் மருத்துவர் மற்றும் பல் மருத்து சங்கத்தினர் பேட்டி.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் செயல்பட்டு பல் மருத்துவமனையில் கடந்த 2023 ஆம் ஆண்டு சிகிச்சை பெற்ற 8 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததாக தமிழக பொதுசுகாதாரம் மற்றும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனை ஆய்வறிக்கை வெளியிட்டதையடுத்து இன்று திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஞான மீனாட்சி சம்பந்தப்பட்ட பல் மருத்துவமனையில் ஆய்வு மேற்க்கொண்டார், அதனை தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பல் மருத்துவர் அறிவரசன் மற்றும், பல் மருத்துவர் இளவரசன் மற்றும் அகில இந்திய பல் மருத்து சங்க துணைத்தலைவர் கோகுல் செய்தியாளர்களை சந்தித்த போது. வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பதாக தற்போது தவறான ஆய்வு அறிக்கையை தமிழக பொதுசுகாதாரத்துறையும், வேலூர் சி.எம்.சி மருத்துவக்குழுவினரும் வெளியிட்டுள்ளது.. கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திராணி என்பவர் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்த நிலையில் அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டதால், சம்பந்தப்பட்ட பல் மருத்துவமனை சுமார் ஒன்றரை மாதம் மூடப்பட்டிருந்ததாகவும், அப்பொழுது மூடப்பட்ட பல் மருத்துவமனையில் இருந்து தமிழக பொதுசுகாதார துறையினர் மற்றும் வேலூர் சி.எம்.சி மருத்துவக்குழுவினர் கருவிகளையும், உபகரணங்களையும் பரிசோதனைகளை மருத்துவக்குழுவினர் எடுத்துள்ளனர். மேலும் பல் மருத்துவனையில் எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் குறித்து முழுமையாக அறிக்கையை மருத்துவக்குழுவினர் எங்களுக்கு சமர்பிக்கவில்லை எனவும், மேலும் 8 பேர் உயிரிழந்தது, அவர்களுக்கு அப்போது பல்வேறு நோய் தொற்றுகள் இருந்ததால் அவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தற்போது தமிழக பொதுசுகாதார துறை மற்றும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனை அறிவித்த ஆய்வு அறிக்கை முற்றிலும் தவறு என பேட்டியளித்தனர்..
Next Story

