வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்க எம்பி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்க எம்பி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மழை வடிநீர் கால்வாய் அமைக்க சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதி திருப்பத்தூர் பகுதிகளில் இருந்து வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் கால்வாய் அமைப்பதற்காக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜி மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சி.என்.அண்ணாதுரை எம்பி அவர்களும் அரசு துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று மழை நீர் கால்வாய் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். அதனைதொடர்ந்து செட்டியப்பனூர் ஜனதாபுரம் ரவுண்டானா அருகில் தேங்கும் மழை நீரை அகற்றும் பணியை பார்வையிட்டு, நிரந்தர தீர்வு காண நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கேட்டு கொண்டார். இந்நிகழ்வில் ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பிரான்சிஸ் சேவியர், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல், ஜோலார்பேட்டை நகர மன்ற துணைத்தலைவர் இந்திரா பெரியார்தாசன், ஊராட்சிமன்ற தலைவர் வீரப்பன், தாமோதிரன் மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தார்கள்.
Next Story