காணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு

X
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பன்னிவீரன்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணியன்(75). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக வீட்டை விட்டு வெளியேறியவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத நிலையில், இன்று (மே.30) இவர்களுக்கு சொந்தமான கிணற்றின் அருகே சுப்பிரமணியன் உடைகள் கிடந்துள்ளது. கிணற்றில் நீர் அதிகமாக இருந்தால், மேலூர் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு கிணற்றில் தேடிய போது சுப்பிரமணியன் உடல் கிடைத்தது. இதுகுறித்து கீழவளவு போலீசார் உடலை கைப்பற்றி, இறப்புக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

