பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் தனியார் பள்ளி வாகனங்கள் சோதனை

பள்ளிக்கூடம் ஜூன் இரண்டாம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 20 தனியார் பள்ளி வாகனங்கள் மீண்டும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு சான்று வழங்கப்பட்டன
பள்ளிக்கூடம் ஜூன் இரண்டாம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 20 தனியார் பள்ளி வாகனங்கள் மீண்டும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு சான்று வழங்கப்பட்டன திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளிகளில், மாணவ -- மாணவியரின் வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளி வாகனங்கள் சோதனை செய்யும் பணி, திருத்தணியில் நடந்தது. இதில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர், தனியார் பள்ளி ** வாகனங்களை ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு, 39 பள்ளிகளின் 155 வாகனங்கள் வந்தன. வாகனங்களின் படிக்கட்டுகள், அவசர கால வழி, மருத்துவ உதவி பெட்டகம், 'சிசிடிவி' கேமரா மற்றும் வாகனத்தின் தகுதிச் சான்றிதழ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 135 வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. குறைபாடுகள் கண்டறியப்பட்ட 20 வாகனங்களின் தகுதி நிராகரிக்கப்பட்டது. இந்த வாகனங்களில் உள்ள குறைபாடுகளை நீக்கி, மீண்டும் மறுஆய்வுக்கு வரவேண்டும் என, உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து குறைபாடுகள் சரி செய்யப்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை திருத்தணி போக்குவரத்து வட்டார ஆய்வாளர் ராஜசேகர் இன்று ஆய்வு செய்து சிறு சிறு குறைபாடுகளையும் சரி செய்து சான்றிதழ்களை வழங்கினார்
Next Story