குடி போதையில் தற்கொலை செய்து கொண்ட சுமை தூக்கும் தொழிலாளி

X
Komarapalayam King 24x7 |30 May 2025 7:52 PM ISTகுமாரபாளையம் அருகே குடி போதையில் சுமை தூக்கும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம் அருகே ஒட்டன்கோவில் பகுதியில் வசிப்பவர் கார்த்திகேயன், 37. மொடக்குறிச்சி சர்க்கரை ஆலையில் லோடு மேனாக வேலை செய்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் மாலை, தான் குடியிருக்கும் பகுதியில் உள்ள தன் அம்மா வீட்டில், மாலை 03:00 மணியளவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இவரது மனைவி சத்தியா, 33, குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
