இரணியல்: சாலையில் விழுந்த மரம்

X
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமாகி உள்ளது. ஒரு வாரமாக சூறைக்காற்றுடன் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகள் மற்றும் மலையோர கிராம பகுதிகளில் பெருமளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் சாலையோரங்களில் உள்ள மரகிளைகள் முறிந்து விழுந்தும், மரங்கள் வேரோடு சாய்ந்தும் மின்கம்பங்களில் விழுவதால் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்று இரவிலும் சுமார் எட்டு மணி அளவில் கடுமையான சூறைக்காற்று வீசியதில் கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் கிராமங்கள் இருளில் மூழ்கி வருகின்றன. இந்த நிலையில் இன்று இரணியலில் இருந்து முட்டம் செல்லும் செல்லும் சாலையில் குன்னத்துகுளம் பகுதியில் சாலையில் பெரிய மரம் ஒன்று விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மரத்தை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story

