தொடர் மழையின் காரணமாகவும், விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளின் நீர் வந்து கொண்டிருப்பதாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி கோவிலுக்க

தொடர் மழையின் காரணமாகவும், விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளின் நீர் வந்து கொண்டிருப்பதாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி  சதுரகிரி கோவிலுக்க
X
தொடர் மழையின் காரணமாகவும், விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளின் நீர் வந்து கொண்டிருப்பதாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி கோவிலுக்கு பக்கதர்கள் செல்ல வனத்துறை தடை...*
தொடர் மழையின் காரணமாகவும், விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளின் நீர் வந்து கொண்டிருப்பதாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி கோவிலுக்கு பக்கதர்கள் செல்ல வனத்துறை தடை... விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்.இந்த கோயிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் தற்பொழுது அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.மழை பெய்தால் சதுரகிரி   கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை இருந்து வருகிறது.  கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் வரை  உயிரிழந்தனர்.  இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை என்பது பெய்து வருகிறது.குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரையில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் இன்று ஶ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் , மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருவதாலும், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளின் நீர் வந்து கொண்டிருப்பதாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று சதுரகிரி கோவிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் சதுரகிரி கோவிலுக்கு ஒரு சில பக்தர்கள் வருகை தந்த நிலையில் தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர் .இதனால் கோயில் அடிவாரப் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.மழையை பொறுத்தே நாளை பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story