பட்டாவில் இறந்தவர்கள் பெயரை நீக்கிவிட்டு வாரிசுதாரர்களை சேர்க்க நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

பட்டாவில் இறந்தவர்கள் பெயரை நீக்கிவிட்டு வாரிசுதாரர்களை  சேர்க்க நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர்  தகவல்.
X
பட்டா
பௌத்தி பட்டா திட்டம் அதாவது பட்டாவில் இருந்து இறந்தவர்கள் பெயரை நீக்கி வாரிசுதாரர்கள் பெயரை சேர்க்க, இ-சேவை மையம் மூலம் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த காலங்களில் பட்டாதாரர் ஒருவர் இறந்திருந்தால், அவர் பெயர் நீக்கப்பட்டு அவரது வாரிசுகளின் பெயர்களை சேர்க்கும் பௌத்தி பட்டா மாறுதல் திட்டம் நடைமுறையில் இருந்தது. ஆனால் காலப்போக்கில், இந்த பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பௌத்தி பட்டா திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே,  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இருக்கிறது. அதனை பொதுமக்கள் http://eservices.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பார்க்கலாம். பல சிட்டாவில் உள்ள பட்டாதாரர்களின் பெயர்கள் இறந்தவர்களில் பெயர்கள் நீக்கப்படாமலும், வாரிசுதாரர்களின் பெயர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன. எனவே பட்டாவில் உள்ள இறந்த நில உரிமையாளர்களின் பெயர்களை நீக்கி வாரிசுதாரர்கள் அல்லது உரிமம் பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க,  இறப்புச் சான்றிதழ்,   வாரிசு சான்று, வாரிசு எவரேனும் இறந்திருந்தால் அவரது வாரிசு சான்று, பட்டாமாறுதல் கோரும் நில புல எண்ணின் வில்லங்க சான்றிதழ், பதிவு செய்யப்பட்ட தான செட்டில்மெண்ட், பாகப்பிரிவினை நீதிமன்ற தீர்ப்பு போன்ற ஆவணங்களுடன், இ-சேவை மையங்கள் tamilnilam.tn.gov.in/citizen/ என்ற சிட்டிசன் போர்டல் வழியாக விண்ணப்பிக்கலாம்.  இந்த விண்ணப்பங்கள்,  ஆவணங்கள் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக, உரிய ஆணை பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் மாற்றங்கள் செய்யப்படும். மேலும், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மேற்கண்டபடி இணைய வழியில் மனு செய்து கொண்ட பின் ஆவணங்களின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு உட்பிரிவு செய்து உரிய ஆணை பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் மாற்றம் செய்யப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Next Story