கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம்
பெரம்பலூர் வட்டம் , செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் குழந்தை பாதுகாப்பு அலகின் கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற அலுவலக செயலர் கோவிந்தன் முன்னிலை வகித்தார். குழந்தை பாதுகாப்பு அலகின் களப்பணியாள்ர் ஜனார்த்தன் பங்கேற்று குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை கல்வி நலன் , போதை பொருட்கள் பயன்படுத்துவதால் சமூகத்தில் நிகழும் விளைவுகள் உட்பட பல்வேறு கருத்துகளை வலியுறுத்தி பேசினார்.இக்கூட்டத்தில் எளம்பலூர் சுகாதார நிலைய ஆய்வாளர் மணி , செங்குணம் (மேற்கு) அங்கன்வாடி பணியாளர் கண்ணம்மாள் , செங்குணம் மகளிர் சுய உதவி குழு கணக்காளர் கெஜலெட்சுமி, ஊராட்சி கணிணி இயக்குபவர் சரிதா மற்றும் செங்குணம் குமார் அய்யாவு உட்பட ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story




