எடப்பாடி அருகே ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மன் கோவில் தெவப்பூஜை திருவிழா

எடப்பாடி அருகே ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மன் கோவில் தெவப்பூஜை திருவிழா
X
எடப்பாடி அடுத்த குறும்பம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மன் கோவில் தெவப்பூஜை திருவிழா நடைபெற்றது.
எடப்பாடி அருகே ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மன் கோவில் தெவப்பூஜை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நூற்றுக்கணக்கான ஆடு சேவல்களைப் பலியிட்டு சுவாமி தரிசனம் செய்தனர் ... சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் குறும்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட புங்கனேரியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மன்,  ஸ்ரீ வீரமாத்தி அம்மன்,  ஸ்ரீபுடவைக்காரியம்மன் கோவில்களின் மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் வெகு சிறப்பாக நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து இன்று ஸ்ரீ பெரியாண்டிச்சி, ஸ்ரீ வீரமாத்தி , ஸ்ரீபுடவைக்காரி அம்மன் கோவில்களில் நடைபெற்ற மகா தெவ பூஜை திருவிழாவில் எடப்பாடி மற்றும் சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று விடிய விடிய  பொங்கல் வைத்து பழம், தேங்காய் வைத்து படையலிட்டு, நூற்றுக்கணக்கான ஆட்டுக்கிடாய் மற்றும் சேவல்களை பலியிட்டு சிறப்பு பூஜைகள் செய்து  வழிபட்டனர். இந்த தெவ பூஜை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மன்,ஸ்ரீ வீரமாத்தி அம்மன் சுவாமிகளை வழிபட்டு சென்றனர்.
Next Story