பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது

X
தாராபுரம் அருகே உள்ள ஜீவா காலனி பகுதியைச் சேர்ந்த சித்தார்த் என்பவரது மனைவி ஆர்த்தி (வயது 23). தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஜீவா காலனி பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ஆர்த்தி வைத்திருந்த செல் போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மடத்துக்குளம் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (20) என்பவரை கைது செய்தனர்.
Next Story

