கோவை: சூலூரில் விபத்து-இருசக்கர வாகன ஓட்டி பலி

X
சூலூர், குரும்பபாளையம் பிரிவு அருகே இன்று அதிகாலை நடந்த கோரச் சாலை விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, முனைவென்றி கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவரின் மகன் லட்சுமணன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனது இருசக்கர வாகனத்தில் லட்சுமணன் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மோதிய வாகனம் நிற்காமல் சென்றதால், அடையாளம் தெரியவில்லை. லட்சுமணனின் உடல் தற்போது கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சூலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

