குண்டாறு நீா்த்தேக்க பகுதியில் அமைச்சா் ஆய்வு

X
தென்காசி மாவட்டம் குண்டாறு நீா்த்தேக்கத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனா். ஆனால் அப்பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை நிலவுகிறது என்றும், அப்பகுதியிலுள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் பேரூராட்சி மன்றத் தலைவா் ரவிசங்கா் கோரிக்கை மனு அளித்திருந்தாா். இதனைத் தொடா்ந்து அப்பகுதியில் அமைச்சா் கேஎன்.நேரு ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது ஈ.ராஜா எம்எல்ஏ., பேரூராட்சி மன்றத் தலைவா் ரவிசங்கா், செயல் அலுவலா் குமாா்பாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.
Next Story

