கோவை: வீடு புகுந்து நகை திருடிய தொடர் திருடன் கைது !

X
கோவை, சுல்தான்பேட்டையில் கடந்த பொங்கல் விடுமுறையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்த சூர்யா என்பவரின் வீட்டில் நுழைந்து நகைகள் திருடிய வழக்கில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனசேகரன் (37) கைது செய்யப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், மற்றொரு திருட்டு வழக்கிலும் அவன் தொடர்புடையது தெரியவந்தது. இரு வழக்குகளிலும் 7 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட தனசேகரன் கோவை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டுள்ளார்.
Next Story

