போச்சம்பள்ளி:சாலையில் கொட்டும் மாங்காய் விவசாயிகள் வேதனை

போச்சம்பள்ளி:சாலையில் கொட்டும் மாங்காய் விவசாயிகள் வேதனை
X
போச்சம்பள்ளி:சாலையில் கொட்டும் மாங்காய் விவசாயிகள் வேதனை
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கருக்கும் மேல் மா சாகுபடி விவசாயிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மாங்காய்களுக்கு இந்த ஆண்டு கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ மாங்காய் 5 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாவதால் மா, தோட்டங்களில் அறுவடை செய்யாமல் உள்ளனர். இந்த நிலையில் மாந்தோப்புகளில் மாங்காய்கள் மரத்திலேயே அலுகும் நிலையில் உள்ளது. இதனால் மா விவசாயிகள் அதை அறுவடை செய்து டிராக்டர்கள் மூலம் கொண்டு வந்து மருதேரி ஏரிக்கரை சாலையோரங்களில் கொட்டி விட்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மா விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
Next Story