கீழே கிடந்த செல்போன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

X
திருநெல்வேலி மாவட்டம் குப்பக்குறிச்சியை சேர்ந்த திமுக பிரமுகர் சுந்தர் நேற்று மாலை தாழையூத்து பேருந்து நிறுத்தத்தில் 15000 மதிப்புள்ள செல்போனை கீழே கிடந்து எடுத்துள்ளார். அதனை தாழையூத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் மதுரையை சேர்ந்தவர் செல்போன் என தெரியவந்ததை தொடர்ந்து செல்போனை உரிய நபரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர்.
Next Story

