கோவை: உயிருக்கு பயம் - கல்குவாரி மூடக் கோரிக்கை !

கோவை: உயிருக்கு பயம் - கல்குவாரி மூடக் கோரிக்கை !
X
கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் செயல்படும் கல்குவாரியால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
கோவை, செட்டிபாளையம் அருகே உள்ள கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் செயல்படும் கல்குவாரியால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பாறைகளுக்கு வெடி வைக்கும் போது வீடுகள், கால்நடைகள் மீது கற்கள் விழும் சம்பவங்கள் தொடர்கின்றன. லாரிகளின் போக்குவரத்தால் தூசித் தாக்கம், சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதுடன், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 2019ஆம் ஆண்டு தொடங்கிய இந்த கல்குவாரி, முறைகேடான லைசன்ஸுடன் செயல்படுகிறது எனக் கூறப்படும் நிலையில், பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காவல்துறையும் முறையான கவனம் செலுத்தவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சமீபத்தில் வந்த ஒரு காவலர், சாலை விபத்துகளில் சாவதைப் போல, கல் விழுந்து சாவதும் ஒன்றுதான் என பொதுமக்களை மிரட்டியதாகவும், பிரச்சனை செய்தால் வழக்கு பதியும் என கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து, கல்குவாரியை உடனடியாக மூட நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story