திருப்புகலூர் அருள்மிகு அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம்

திருப்புகலூர் அருள்மிகு அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம்
X
பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் அருள்மிகு அக்னீஸ்வர சுவாமி திருக்கோயிலில், வருகிற ஜூன் மாதம் 5-ம் தேதி கும்பாபிஷேகம் பெற உள்ளது. விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து, திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ப.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீன அருளாட்சிக்குட்பட்ட அருள்மிகு அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில் 3000 -வது கும்பாபிஷேகம் விழா வருகிற ஜூன் 5-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு. வருகை தரும் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அறநிலையத்துறை உயர் அதிகாரிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளதால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் செய்து தர திருமருகல் ஊராட்சி ஒன்றியம் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்களையும் ஆய்வு செய்தார். இதில், ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், ஆதீன இளவரசு ஸ்ரீ அஜபா நடேஸ்வர சுவாமிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story