காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

முத்தம்பட்டி வனப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட வே.முத்தம்பட்டி வனப்பகுதியில் அமைந்துள்ளது 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் இங்கு தினசரி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும் நிலையில் சனிக்கிழமை நாட்களில் விசேஷ பூஜைகள் மற்றும் நெய்வேத்தியங்கள் நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் மே 31 என்று சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு காலை முதலே சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்றது இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் கர்நாடகா மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் மேலும் கோயில் நிர்வாகம் சார்பாக பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story