ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம்நாளை மறுநாள் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ராமநாதபுரம் நகராட்சி பள்ளிகளான வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அறிஞர் அண்ணா நடுநிலைப்பள்ளி எம் எஸ் கே தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நகர் மன்ற தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு மாணவச் செல்வங்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வகுப்பறையின் தூய்மையினையும் கட்டடத்தின் நிலைமை பாதுகாப்பாக உள்ளதாதண்ணீர், மின் வசதி, கழிப்பறைகள் ஆகியவை சீராக உள்ளதா என்பதனை ஆய்வு செய்து பள்ளிகளில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள்குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் இந்த ஆய்வின் போது தலைமை ஆசிரியர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊழியர்கள் உடன் இருந்தனர்
Next Story





