பாணாவரதில் கருத்துகேட்பு கூட்டம் மீண்டும் தள்ளி வைப்பு

X
காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாணாவரம் ஊராட்சி யில் கடந்த 2022-23 மற்றும் 2023-24-ம் நிதியாண்டு வரவு, செலவு கணக்குகள் மீது ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து ஊராட்சி மன்றத்தலைவர், துணைத்தலைவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் சோளிங்கர் தாசில்தார் தலை மையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ததை தொடர்ந்து கருத்து கேட்புக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுவதாக அனைவருக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனால் வார்டு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேற்று வந்துள்ளனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் இன்று நடைபெறுவதாக இருந்த கருத்து கேட்பு கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வார்டு உறுப்பினர்கள்,இது குறித்து காரணம் கேட்டபோது, ஊராட்சி மன்ற தலைவர் மீண்டும் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளதால், கூட்டம் தள்ளிவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.இரண்டாவது முறையாகவும் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதால், வார்டு உறுப்பினர்கள் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரிடம் இதுதொடர்பாக மனு அளித்துள்ளனர்.
Next Story

