புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய
நாகை மாவட்டம் பொது சுகாதாரத் துறை சார்பில், மாவட்ட சுகாதார அலுவலர் பிரதாப் கிருஷ்ணகுமார் தலைமையில், நாகையை அடுத்த பாப்பாக்கோயில் சர் ஐசக் நியூட்டன் கல்லூரி மற்றும் பாரான்சி மாணவர்கள் புகையிலை தடுப்பு உறுதிமொழி ஏற்றனர். பின்னர், கல்லூரி வளாகத்திலிருந்து, கடைத்தெரு வழியாக விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திய படி பேரணி நடைபெற்றது. புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் கல்லூரி வளாகத்தில் எழுதப்பட்டும். கல்லூரி வளாகத்தைச் சுற்றி 100 மீட்டர் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் பீடி, சிகரட் போன்றவை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என்று அறிவுறுத்தப்பட்டது. இங்கு புகைப் பிடிக்க கூடாது என்ற விளம்பரம் இல்லாத கடைகளுக்கு, புகையிலை தடுப்பு சட்டம் -2003-ன்படி அபராதம் விதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் பிரித்திவிராஜ், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், கல்லூரி முதல்வர். பேராசிரியர் மாதவன் மதுமிதா, புகையிலை தடுப்பு ஆலோசகர்கள் ராகுல், பாலமுருகன் சுபதீஸ்வரன், ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story




