ஆற்காடு அருகே இறுதிச்சடங்கில் தகராறு - வாலிபர் கைது!

ஆற்காடு அருகே இறுதிச்சடங்கில் தகராறு - வாலிபர் கைது!
X
இறுதிச்சடங்கில் தகராறு - வாலிபர் கைது!
ஆற்காடு அடுத்த திமிரி பகுதியை சேர்ந்தவர் எழிலரசன். இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரக்கடம் பகுதியில் உள்ள தனியார்கம் பெனியில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் எழிலரசன் நேற்று முன்தினம் ஆற்காட்டில் நடைபெற்ற உறவினர் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்துள்ளார். அப்போது ஆற்காடு லேபர் தெருவை சேர்ந்த மதன் (வயது 20) என்ற வாலிபர் எழிலரசனிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றி எழிலரசனை, மதன் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த எழிலரசன் ஆற்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இது குறித்த புகாரின்பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story