அவசர சிகிச்சை ஊர்தியை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
திருவள்ளூர் மாவட்டம் ரூபாய் 24,50,000 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் கீழ் கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி சேவையினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப், கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள். வள்ளலாரின் 200-வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற கைவிடப்பட்ட, காயமடைந்த, வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப் பராமரிக்கும் விதத்தில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம்மானது 2022-2023 ஆம் நிதியாண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்த தெருவில் சுற்றித் திரியும் பிராணிகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளித்தல், அவசர சிகிச்சை ஊர்தி (Ambulance) கொள்முதல் செய்தல், மற்றும் விலங்குகளுக்கு உறைவிடம் (Animal Shelter) கட்டுதல் ஆகிய பணிகளுக்காக நிதி வழங்கப்பட்டு வரும் நிலையில் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்ற ஊத்துக்கோட்டை அடுத்த தேவந்தவாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகோகுலகிருஷ்ண கோசாலையில், தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.8,00,000/- அரசு மானியத் தொகையுடன் சேர்த்து ரூ.16,50,000/- சேவையை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. மேற்படி அவசர ஊர்தியின் சேவையினை ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்து சுற்றித் திரியும் பிராணிகளை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும், கோசாலாவிற்கு அழைத்துச் செல்லவும் வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ஜெயந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்) மோகன், மற்றும் ஸ்ரீகோகுல கிருஷ்ண கோசாலாவின், தொண்டு நிறுவனர், நடராஜ். தன்னார்வலர்கள் உட்பட பலர் உள்ளனர்.
Next Story






