வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூர் வேதநாயகி உடனுறை திருமறைநாதர் திருக்கோயில் வைகாசி திருவிழா இன்று (மே.31) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூன் 4ல் மாங்கொட்டை திருவிழாவும், ஜூன் 7-ஆம் தேதி காலை 10:35 மணிக்கு மேல் 11:05-க்குள் சிம்ம லக்னத்தில் திருமறைநாதர் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ஜுன் 8-ஆம் தேதி காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
Next Story





