மோட்டார் சைக்கிள் மீது கண்டெய்னர் லாரி மோதி ஒருவர் பலி

X
மதுரவாயல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் பலி. சென்னை, மதுரவாயல் அடுத்த வானகரம், கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(61), ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இன்று இரவு வேலை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார் பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது பூந்தமல்லி நோக்கி வந்த கன்டெய்னர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முத்துராமலிங்கத்தின் மீது லாரி வண்டியின் சக்கரம் ஏறி, இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து போனார் இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன முத்துராமலிங்கம் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்து விபத்திற்கு காரணமான கண்டெய்னர் லாரி டிரைவர் வெங்கடேசன்(31), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்....
Next Story

