கரூரில் திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

கரூரில் திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
கரூரில் திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் சில மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கு முன்கூட்டியே தயாராகும் வகையில் திமுக இளைஞரணி சார்பில் அண்மையில் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டணியில் கரூர் மாவட்டஇளைஞர் அணி சார்பில் ஒன்றிய ,நகர ,பகுதி , பேரூர் ,அமைப்பாளர் , துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் .நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், மாநில இளைஞரணி பொறுப்பாளர்கள் சூரிய கிருஷ்ணமூர்த்தி , விக்னேஷ் ,சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் , இளங்கோ , சிவகாமசுந்தரி மற்றும் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும் ,வரவுள்ள தேர்தலில் இளைஞர் அணி அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story