ஓசூர்: தமிழ்தேச பேரியக்கம் சார்பில் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

X
கன்னட மொழி சர்ச்சை விவகாரத்தில் நடிகர் கமலஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஓசூர் ராம்நகரில் தமிழ் தேசிய பேரியக்கம் அமைப்பு சார்பில் கன்னட அமைப்புகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அந்த அமைப்பின் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து கலந்து கொண்டார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோசங்கள் எழுப்பினார்.
Next Story

