மேம்பால பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்.

மதுரை கோரிப்பாளையம் பகுதி நடக்கும் மேம்பால பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு ஆய்வு செய்தார்.
மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் மேம்பாலப்பணியை பொதுபணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் வேலு அவர்கள் இன்று ( மே.31)ஆய்வு செய்தார். மேம்பாலப்பணிகளை வரும் டிசம்பர் இறுதிக்குள் முடிக்க பணிகளை விரைவு படுத்துமாறு அமைச்சர் அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது தலைமைப்பொறியாளர், க(ம)ப, சென்னை சத்யபிரகாஷ், சிறப்பு தொழில்நுட்ப அதிகாரி சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர், க(ம)ப, மதுரை ரமேஷ் மற்றும் கோட்டப் பொறியாளர் மதுரை மோகனகாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story