கரூரில் சர்வதேச புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கரூரில் சர்வதேச புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கரூர் துளசி பார்மசி சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.. இப்பேரணியை கரூர் நகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் விஸ்வநாதன் மற்றும் அர்ஜுனன் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்... இப்பேரணியில் துளசி பார்மசி நிறுவனத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்று பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் அளித்தனர் இப்பேரணி கரூர் - கோவை சாலையில் இருந்து ஜவஹர் பஜார் மற்றும் தலைமை தபால் நிலையம் வரை சென்று முடிவடைந்தது. பேரணியின்போது புகையிலை மற்றும் குட்கா உள்ளிட பொருள்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நடந்து சென்றனர்.
Next Story




