பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாஜக சார்பில் பேரணி
திருவள்ளூர் இந்திய ராணுவ வீரர்களுக்கும் பிரதமருக்கு நன்றி தெரிவித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டம் தாராட்சி பெரியபாளையம் தண்டலம் பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய ராணுவத்தின் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் ராணுவ வீரர்களுக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றி தெரிவித்து மூவர்ண தேசிய கொடியை ஏந்தி பாரத மாதா வேடமணிந்தும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமையில் பாஜகவினர் பொதுமக்கள் பாரத மாதா வாழ்க ராணுவ வீரர்கள் வாழ்க பாரத பிரதமர் மோடி வாழ்க என கோசங்களை எழுப்பியவாறு முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். இதில் முன்னாள் மாநில சிந்தனை பிரிவு செயலாளர் மகாலட்சுமி மாநில பொதுக்குழு உறுப்பினர் சிதம்பர லிங்கம் மாவட்ட செயலாளர் சாந்தி மண்டல தலைவர் அரவிந்த் ஆகியோர் பங்கேற்றனர்
Next Story





