புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி

புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி
மே 31 இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் இதனை முன்னிட்டு நாட்டின் பல்வேறு இடங்களில் புகையிலை எதிர்ப்பு பேரணிகள் மற்றும் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி சார்பாக அண்ணா சிலையி அருகில் இருந்து புகையிலை எதிர்ப்பு தின பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தொடங்கி வைத்தார். வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக நகராட்சி அலுவலகத்தை பேரணி அடைந்தது. நகராட்சி அலுவலகத்தில் புகையிலை ஒழிப்பு தின உறுதி மொழியை நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு வாசித்தார். புகை பிடிக்கவோ புகையிலை பொருட்களை யாதொரு வடிவிலும் உட்கொள்ளவோ மாட்டேன் என்றும் எனது நண்பர்கள் உறவினர்களை புகை பிடிக்க ஊக்குவிக்க மாட்டேன் என்றும் பணியின் போது சக ஊழியர்களை புகையிலை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க ஊக்குவிப்பேன் என்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதனால் ஏற்படும் நோய்களிலிருந்து எனது சமுதாயத்தை பாதுகாக்க பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் பள்ளி மற்றும் பொது இடங்களில் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன் என நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு வாசிக்க அதனை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வழிமொழிந்தனர்.நிகழ்ச்சியில் இந்த பேரணி மற்றும் உறுதிமொழியின் போதுநகர் மன்ற உறுப்பினர்கள் தான் ராஜா தாமரைச்செல்வி மணிகண்டன் புவனேஸ்வரி உலகநாதன் செல்வி ராஜவேல் ஆகியோர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பங்கேற்றனர்.
Next Story