கல்லாவி: மரத்தில் இருசக்கர வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அடுத்துள்ள மூக்கனூர்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (27) இவர் நேற்று போச்சம்பள்ளி அருகே வேலம்பட்டி பகுதிக்கு நடன நிகழ்ச்சியை பார்ப்பதற்காக டூவீலரில் சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த போது தொட்டப்பட்டி ஆற்றுப்பாலம் அருகில் வந்த போது அங்கிருந்த மரத்தில் மரத்தின் மீது டூவீலர் எதிர்பாராதவிதமாக மோதியதில் படுகாயம் அடைந்த பிரவீனை அகிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பிரவீன் உயிரிழந்தார். இது குறித்து கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

