தமிழக வெற்றி கழகத்தின் திருமருகல் ஒன்றிய செயலாளர்

X
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்று, தமிழக வெற்றி கழகத்தின் திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் அ.ஜெகபர்தீன் அக்கட்சியிலிருந்து விலகி, நாகை மாவட்ட திமுக செயலாளர் என்.கெளதமன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். நிகழ்ச்சியில், நாகை மாவட்ட துணை செயலாளர் ஆரூர் மணிவண்ணன், மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் சுல்தான் ஆரிப், மாவட்ட மருத்துவ அணி துணை செயலாளர் மருத்துவர் அ.ஷாஜகான், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்து முகம்மது, தமுமுக கிளை செயலாளர் அஷ்ரப் அலி மற்றும் அமானுல்லா. ரியாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story

