நாகல்குழி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

X
அரியலூர், மே 31 அரியலூர் மாவட்டம், வாரியங்காவல் அருகே நாகல்குழி, அய்யனேரி கரையிலுள்ள விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 26 ஆம் தேதி மங்கள இசையுடன் அனுக்ஞை, கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகா சலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து நான்கு கால பூஜை நடத்தப்பட்டது, புதன்கிழமை காலை 9 மணிக்கு கடம்புறப்பாடும், அதனைத் தொடர்ந்து கோயில் கலசத்துக்கு சிவாச்சாரியர்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். பின்னர் தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தில் கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

